கொரோனா 3-வது அலை: குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரம்

குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பாக மதுரை ரயில் நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு: ரயில்வே போலீஸார் நடவடிக்கை

Update: 2021-08-25 02:11 GMT

மதுரை ரயில் நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட போலீஸார் 

கொரோனா மூன்றாம் அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென  மதுரை ரயில்வே காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ரயில்வே காவல்துறை தலைவர் கல்பனா நாயக் மற்றும் துணை தலைவர் ஜெயகௌரி ஆகியோரின் உத்தரவின் பேரில், அனைத்து ரயில் நிலையங்களிலும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, மதுரை இருப்பு பாதை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பொன்னுசாமி தலைமையில், மதுரை ரயில் நிலையத்தில் பயணிகள் மற்றும் குழந்தைகளுக்கு  பழச்சாறு வழங்கி, கொரோனா குறித்து போலீஸார்  விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். மேலும், பயணிகளுக்கு கிருமி நாசினி, முகக் கவசம் ஆகியவை வழங்கப்பட்டது.கொரோனா மூன்றாம் அலையில், இருந்து குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள் போதிய விழிப்புணர்வை கொண்டிருக்க வேண்டும் என, இருப்புப்பாதை உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் பொன்னுச்சாமி, பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Tags:    

Similar News