பாப்புலர் ஃபிராண்ட் ஆஃப் இந்தியா சார்பில் ஆம்புலன்ஸ் ஊர்தி அர்ப்பணிப்பு

தமிழக அரசு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கக் கூடியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, மத உரிமையை பாதுகாக்க வேண்டும்;

Update: 2021-10-01 10:37 GMT

மதுரையில் பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் பொதுமக்கள் பயன்பாடுக்கு ஆம்புலன்ஸ் வாகன  சேவை வழங்கினர்

திமுக ஆட்சி பாராட்டும்படி உள்ளது என்றார் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில தலைவர் முஹம்மது ஷேக் அன்சாரி.

மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி மதுரை ரயில் நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் வைத்து நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ். முஹம்மது அபுதாஹிர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில தலைவர் எம். முஹம்மது ஷேக் அன்சாரி கலந்து கொண்டு  ஆம்புலன்ஸ் ஊர்தியை பொதுமக்கள் பயனபாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்.நிகழச்சியில், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேது. கருணாஸ், அகில இந்திய பார்வார்டு ப்ளாக் தமிழ் மாநில தலைவர் பி.வி. கதிரவன் உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கத் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.

பின்னர்,  மாநில தலைவர் முஹம்மது ஷேக் அன்சாரி செய்தியாளர்களிடம் மேலும் பேசியதாவது: திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள ஹஜ்ரத் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்ஹா மற்றும் பள்ளிவாசல்  விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மற்றும் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கக் கூடியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, மத உரிமையை பாதுகாக்க வேண்டியவர்கள் அதே காரணத்தைக் காட்டி மத உரிமையை மறுப்பது என்பது ஜனநாயத்திற்கு உகந்தது அல்ல. மாவீரன் யூசுப் கான் காசிப் என்ற மருதநாயகம், தென்னிந்தியாவில் வெள்ளையனை எதிர்த்து போரிட்டவர்களில் மிக முக்கியமானவர். வெள்ளையர்கள் இம்மண்ணை அடிமைப்படுத்த முயற்சித்த நேரத்தில், மருதநாயகம் யூசுப் கான் காசிப்பின்  போராட்டம் இந்திய வரலாற்றில் மிக முக்கிய பங்கு வகித்தது.

ஆகவே, அவரின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் வரக்கூடிய அக்போபர்-15 அவருடய நினைவு நாளில் மதுரையில் மணிமண்டபம் அமைக்க தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.மேலும், இந்திய சுதந்திர போராட்ட வீரர் மதுரை ஹாஜி முஹம்மது மெளலானாவின்  நினைவாக மௌலானா பூங்கா அன்றைய ஆட்சியாளர்களால் அவர் மறைந்த பிறகு மதுரையின் மத்திய பகுதியில் உருவாக்கப்பட்டது. பிற்காலத்தில், மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள அரசு போக்குவரத்து கழகம் பணிமனையாக மாற்றப்பட்டுள்ளது. தமிழக அரசு அவருடைய தியாகத்தை நினைவுகூரும் வகையில், மீண்டும் அதே இடத்தில் அதே பெயரில் மௌலானா பூங்கா அமைக்க தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

150 நாள் திமுக ஆட்சியின் செயல்பாடு குறித்த கேள்விக்கு, திமுக தேர்தல் நேரத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார்கள். கொரோனா நோய் தொற்று நேரத்தில் தமிழக அரசு செயல்பட்ட விதம் பாராட்டுக்குரியது. மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம், முஸ்லிம்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றார். இதில்,  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில மண்டலத் தலைவர் எஸ்.பி.முஹம்மது நஸ்ருதீன், மதுரை மாவட்ட த் தலைவர் எஸ். முஹம்மது அபுதாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News