மதுரையில் ஆதரவற்றோருக்கு உதவும் பெண் போலீஸ் ஆய்வாளர்

மதுரையில் , சாலையோரமாக படுத்து உறங்கும் நலிந்த மக்களுக்கு உணவு மற்றும் போர்வை வழங்கும் பெண் காவல் ஆய்வாளர்.;

Update: 2021-06-06 11:05 GMT

மதுரையில் ஆதரவற்றோருக்கு உதவும் பெண் போலீஸ் 

தெருவில் ஆதரவற்ற நிலையில் உள்ள நபர்களுக்கு உணவும் போர்வையும் வழங்கிய பெண் காவல் ஆய்வாளர் குவியும் பாராட்டுகள்:


மதுரை மாநகர எஸ். எஸ். காலனி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கலைவாணி ,இவர், ரயில் நிலையம் , நேதாஜி ரோடு, காளவாசல், மற்றும் பசும்பொன் நகர் ஆகிய பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் உள்ள நபர்களுக்கு உணவும், குளிரிலும் கொசுக்கடியில்படுத்து உறங்கிய ஆதரவற்ற நபர்களுக்கு தனது சொந்த செலவில் உணவும் , போர்வை வழங்கினார்.

இவரது சேவையை, அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள் .கொரோனா தொற்று முதலாம் அலையின் போது,  இவர்,  சுப்ரமணியபுரம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணியாற்றிய போது , கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு தனது சொந்த செலவில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது .



 


Tags:    

Similar News