காரில் இருந்த வைரம் மோதிரம் திருட்டு; மதுரையில் ஆட்டோ டிரைவர் கைது

மதுரையில் காரிலிருந்த வைரம் மோதிரம் திருடியவரை ஒரே நாளில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update: 2021-08-03 16:58 GMT

பைல் படம்.

இராமநாதபுரத்தை சேர்ந்தவர் மோகித் அஜித். 23. இவர், தனது திருமண நிச்சியாதார்த்தற்காக  மதுரை அண்ணாநகரில், உள்ள நகைக் கடையில் வைர மோதிரத்தை வாங்கியுள்ளார். பின்னர், அந்த மோதிரத்தை காரில் வைத்துவிட்டு, மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஜவுளிக் கடைக்கு சென்றுள்ளார். 

ஜவுளிகளை எடுத்துக்கொண்டு திரும்ப வந்து பார்த்துபோது, காரில் இருந்த வைர மோதிரத்தை காணவில்லையாம்.

இது குறித்து அஜித் அளித்த புகாரின் பேரில், திடீர் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து, காவல் ஆய்வாளர் மரியசெல்வம் தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் கணேசன் ஆகியோர் கொண்ட போலீஸ் படையினர் தீவிரமாக விசாரணை செய்ததில், காரில் இருந்த வைர மோதிரத்தை திருடியதாக, மதுரை செல்லூரரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் என்பவரை, தனிப்படையினர் கைது செய்தனர். காணமல் போன வைரம் மோதிரத்தின் மதிப்பு ரூ. 40 ஆயிரம் ஆகும்.

Tags:    

Similar News