மதுரையில் மாநகராட்சி சார்பில் நோய் தடுப்பு முகாம்: அமைச்சர் தொடங்கி வைப்பு
மதுரை மத்திய தொகுதியில் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற நோய் தடுப்பு முகாம்களை அமைச்சர் ஆய்வு.;
மதுரை மத்திய தொகுதி மக்கள் பயன் அடையும் வகையில், கொரோனா இலவச தடுப்பூசி முகாமை, நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சரும் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பழனிவேல் தியாகராஜன் நேரில் பார்வையிட்டார்.
மாநில நிதி மற்றும் மேலாண்மை துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை மத்திய சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தொகுதி மக்கள் பயனடையும் வகையில் , கொரோனா இலவச தடுப்பூசி முகாம் களை தலைமையேற்று நடத்தி வருகிறார். அந்த வகையில், மதுரை மாநகராட்சி 17 -வது வார்டு அன்சாரி நகர் பகுதியில் கொரோனா இலவச தடுப்பூசி முகாமானது , கான் பள்ளியில் நடைபெற்றது.
இதனை, பார்வையிட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அங்கிருந்த மருத்துவர்களிடம் உரையாடினார். தொடர்ந்து, மதுரை மாநகராட்சி வார்டு எண் 12- வெள்ளிவீதியார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினையும் அவர், பார்வையிட்டார்.
இந்த நிகழ்வில், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன், மதுரை மாநகராட்சி நகர்நல அலுவலர் குமரகுருபரன் மற்றும் 17வது வார்டு திமுகவினர் பங்கேற்றனர்.