மதுரை மாநகர் பகுதிகளில் வேன்களில் காய்கறி விற்பனை தீவிரம் : மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

மதுரை மாநகராட்சி சார்பில் மினி வேன்களில் மாநகர் பகுதிகளில் காய்கறி விற்பனை நடைபெற்று வருகிறது.

Update: 2021-06-13 10:44 GMT

மதுரை மாநகராட்சி சார்பில் வேன்கள் மூலமாக காய்கறி விற்பனை செய்து வருகின்றனர். 

 மாநகராட்சி உட்பட்ட 100 வார்டுகளில் மாநகராட்சி சார்பில் கொரோனாவையொட்டி, மினிவேன் மூலமாக காய்கறி விற்பனை நடைபெற்று வருகிறது.

மதுரையில் சில வார்டுகளுக்கு, மாநகராட்சியின் காய்கறி விற்பனை வேன்கள் வரவில்லையென, அப்பகுதி குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் மாநகராட்சியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.  மாநகராட்சி ஆணையரின் நடவடிக்கையால், மதுரை நகரில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும், மினி வேன் மூலம், மாநகராட்சி அதிகாரிகள் காய்கறி விற்பனையை செய்ய துரித நடவடிக்கை மேற்கொண்டனர்.

மாநகராட்சி சார்பில் காய்கறிகள் அடங்கிய பையானது, ரூ. 100-க்கு விற்பனை  செய்யப்பட்டு வருகிறது. அதே சமயத்தில், ஊரடங்கு தளர்வால், மதுரையில் பல இடங்களில் பொதுமக்கள் சாலையோர கடைகளில் காய்கறிகளை வாங்க குவியத் தொடங்கி  உள்ளனர். இவ்வாறு மக்கள் கூடுவதால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. அதனால் அதிகாரிகள் மக்கள் கூடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


Tags:    

Similar News