மதுரை மாநகராட்சி பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் -ஆணையாளர்

மதுரை மாநகராட்சி பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் -ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன்.;

Update: 2021-08-04 16:54 GMT

மதுரை மாநகராட்சி பள்ளிகளில், ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், இன்று (04.08.2021) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் ஆரம்பப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, சின்னக்கடை தெருவில் உள்ள மாசாத்தியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மறைமலை அடிகள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, சிங்காரத் தோப்பு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு, பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவது குறித்து, பள்ளி மாணவ, மாணவியர்களின் சேர்க்கை குறித்து மற்றும் பள்ளிகளில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பள்ளி வகுப்பறை மற்றும் வளாகத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்குமாறு தலைமை ஆசிரியரிடம் அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News