மதுரை நூலகம் விரைவில் திறப்பு: பட்ஜெட்டில் அறிவிப்பு
தென் தமிழகத்தின் அடையாளமாக திகழப்போகும் மதுரை நூலகம் ஜூன் மாதத்தில் திறக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்
சங்கம் வளர்த்த மதுரையில் 2 லட்சம் சதுர அடியில், மாபெரும் நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளை கவரும் வகையிலும் போட்டித் தேர்வர்களை தயார் படுத்தும் வகையிலும், கலையரங்கத்துடன் பிரம்மாண்டமான நூலகம் அமைந்து வருகிறது. முதல் கட்டமாக, தமிழ் ஆங்கிலத்தில் 3,50,000 புத்தகங்கள் இடம் பெறும். தென் தமிழகத்தின் அடையாளமாக திகழப்போகும் மதுரை நூலகம் ஜூன் மாதத்தில் திறக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையில் கூறினார்
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை எடுத்து நடத்த கோரிக்கை வந்தன. அது மட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுமே பள்ளி கல்வித்துறை கீழ் கொண்டுவரப்படும்
சீர்மரபினர் இந்து சமய அறநிலைத்துறை பள்ளிகளும் பள்ளி கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்படும்
இனி அனைத்து துறைகள் நடத்தும் அனைத்து பள்ளிகளுமே பள்ளிக்கல்வி துறையின் கீழ் கொண்டுவரப்படும் என நிதி அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவிப்பு