அதிமுக பொதுக்குழு வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
அதிமுக பொதுக்குழு வழக்கில் இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையை தொடர வேண்டும் என்றும் வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் . இந்த வழக்கு நீதிபதிகள் எம் துரைசாமி சுந்தர் மோகன் ஆகிய ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், சான்று அளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீடு மனுக்களை விசாரிக்க நீதிபதிகள் ஒப்புதல் அளித்து, அதிமுக பொதுக்குழு தொடர்பான மூன்று மனுக்களையும் இன்று பட்டியலிடும்படி பதிவு துறைக்கு உத்தரவிட்டனர்.
அதன்படி அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது.
மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராக இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார்.
இவ்வழக்கின் விசாரணை இன்று தொடங்கிய நிலையில் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கையை ஏற்று விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம்.