சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பணிஓய்வு
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி இன்றுடன் ஓய்வு பெறுகிறார்;
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சஞ்சீவ் பானர்ஜி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்ட நிலையில் நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
அலகாபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக பதவி வகித்த முனீஷ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது . அதன்படி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டிருந்தார்.
இதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவியேற்றார். இந்நிலையில் நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இவருக்கு அடுத்ததாக மூத்த நீதிபதி எம்.துரைசாமியை பொறுப்பு தலைமை நீதிபதியாக மத்திய அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.
இன்று முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு பிரிவு உபசார விழா நடக்கவுள்ளது. இந்த விழாவில் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
பணி ஓய்வு பெறும் நீதிபதி எம்என் பண்டாரியை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக மத்திய அரசு நியமித்துள்ளது.