தனித்து போட்டி: பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜகவினர்

நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் தனித்து போட்டி அறிவிப்பு வந்த உடன் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Update: 2022-01-31 15:11 GMT

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை IPS நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்ததைக் கொண்டாடும் விதமாக பெரம்பலூர் பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையில் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் பெரம்பலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில், பட்டாசு வெடித்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Tags:    

Similar News