டாஸ்மாக்கில் தீபாவளி மது விற்பனை ரூ 431 கோடி: கடந்தாண்டைவிட குறைவு

தீபாவளி பண்டிகையான நேற்று, டாஸ்மாக் மதுக்கடைகளில், ரூ 431 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. இது கடந்தாண்டவிட குறைவாகும்.

Update: 2021-11-05 06:15 GMT

கோப்பு படம்

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில், பண்டிகை நாட்களில் வழக்கத்தைவிட மதுவிற்பனை பல மடங்கு அதிகமாக இருக்கும். குறிப்பாக, தீபாவளியின்போது மதுவிற்பனை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்துள்ளது.

அவ்வகையில், தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு, நேற்றும், அதற்கு முன் தினமும் டாஸ்மாக் மதுக்கடைகளில், ரூ.431 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. இதில், நேற்று முன் தினம் ( 3-ம் தேதி) மட்டும் ரூ 205.61 கோடிக்கும், தீபாவளி நாளான நேற்று ரூ 225.42 கோடிக்கும் மதுவிற்பனை நடந்துள்ளது. கடந்த தீபாவளியின் போது, ரூ.467.69 கோடிக்கு மது விற்பனையான நிலையில் , இம்முறை குறைந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ. 51.68 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் திருச்சி மண்டலம் ( ரூ. 47.57); சேலம் மண்டலம் ( ரூ.46.62) உள்ளன. சென்னை மண்டலத்தில் ரூ 79.84 கோடிக்கும், கோவையில் ரு. 74.46 கோடிக்கு மதுபானம் விற்பனை நடந்துள்ளதாக, டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:    

Similar News