மாணவர்கள் உளவியல் ரீதியாக தயாரான பின்னரே பாடம் நடத்தப்படும்: அன்பில்மகேஷ்

அனைத்து தொகுதி எம்.எல்.ஏ.,களும் தங்கள் தொகுதியில் உள்ள பள்ளிகள் மீது தனி அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்: அன்பில்மகேஷ் வேண்டுகோள்

Update: 2021-08-31 10:34 GMT

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி 

ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களின் ஆலோசனை கேட்டு தான் பள்ளி ஊடங்களை திறக்கலாம் என அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் (செப்.1-ம் தேதி) நாளை முதல் 9-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாதுகாப்பான முறையில் திறக்கப்படவுள்ளது. பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றபடுகிறதா என ஒவ்வொரு பள்ளிக்கூடங்களும் தலைமை ஆசிரியர் கண்காணிப்பிலும், மாவட்ட சி.இ.ஓ. கண்காணிக்க வேண்டும். என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

பள்ளி மாணவர்கள் பள்ளிக்கும் வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை அவர்கள் முகக்கவசம் அணிய மறந்தாலோ, அல்லது முகக்கவசத்தில் பாதிப்பு ஏற்பட்டாலோ அவர்களுக்கு கொடுப்பதற்காக பள்ளி தலைமை ஆசிரியர் கூடுதல் முகக்கவசங்களை வைத்திருக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார். அனைத்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதியில் உள்ள பள்ளிகள் மீது தனி அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பள்ளிகளில் குழந்தைகள் வருவதற்கு முன்னதாக வகுப்பறையில் உள்ள இருக்கைகள் முழுவதும் கிருமிநாசினியால் சுத்தம் செய்திருக்கவேண்டும். ஓவ்வொரு வகுப்பறைகளுக்கும் தனித்தனியாக சானிட்டரைசர்கள் வைத்திருக்க வேண்டும், கழிவறைகளில் சானிட்டரைசர்கள் வைத்திருக்க வேண்டும், வகுப்பறைகளில் முகக்கவசம் வைத்திருக்க வேண்டும், வகுப்பில் உள்ள மொத்த மாணவர்களில் பாதி அளவு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

வகுப்புகள் 9-30 மணி முதல் 3.30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடத்த வலியுறுத்தப்பட்டுளள்து. ஒரு நாளில் 5 வகுப்புகள் மட்டும் செயல்படும், விளையாட்டு வகுப்புகள் நடத்த வேண்டாம். வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும். தொடக்கம் முதலே பாடம் நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் உளவியல் ரீதியாக தயாரான பின்னரே பாடம் நடத்தப்படும். 95% ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தடுப்பூசி வெலுத்திய பின்னரே ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வர வேண்டும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பயப்பட தேவையில்லை, மாணவர்கள் கட்டாயம் வகுப்புகளுக்கு வர வேண்டும் என குறிப்பிடப்படவில்லை. பெற்றோர்கள் தங்கள் சொந்த விருப்பத்தில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பிவைக்குமாறு கூறினார். பள்ளிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Tags:    

Similar News