இன்று தலைமைசெயலகத்தில் கலைவாணர் அரங்கத்தில், சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி தலைமையில், சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையின் சட்ட அலுவலர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அரசு தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலாளர் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை எஸ். கே. பிரபாகர், கூடுதல் தலைமைச் செயலாளர் நிதித் துறை என். முருகானந்தம், பொதுத் துறைச் செயலாளர் முனைவர் டி. ஜகந்நாதன், தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் ஆர் சண்முகசுந்தரம், சட்டம் / சட்ட விவகாரங்கள் செயலாளர் பி. கார்த்திகேயன், அனைத்து அரசுத் துறைகளின் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், அரசுச் செயலாளர்கள், சென்னை உயர்நீதிமன்றம் / மதுரைக் கிளையின் கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், மாநில அரசு பிளீடர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.