தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளம் -புதிய அரசாணை வெளியீடு

அரசு ஊழியர்கள், தங்கள் ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றும் நடைமுறையை, மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2022-04-13 06:33 GMT

தமிழக அரசு ஊழியர்கள், தங்கள் ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றும் நடைமுறையை, மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது . தமிழக அரசு விடுப்பு விதிகளின்படி அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் ஆகியோருக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் ஈட்டிய விடுப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது . அவ்வாறு 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை எடுக்காதவர்களுக்கு ஆண்டு முடிவில் 15 நாட்களுக்கான முழு ஊதியம் வழங்கப்படும் . இந்நிலையில், கடந்த 2020 ஆம்ஆண்டு ஏப்ரல் முதல் ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த கால அளவு முடிந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கான ஈட்டிய விடுப்பை பெற்றுக் கொள்ள அரசு ஊழியர்கள் தயாராக இருந்தனர் . ஆனால், தற்போது அடுத்த உத்தரவு வரும் வரை ஈட்டிய விடுப்பை பணமாகப் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசுஅறிவித்து , அதற்கான அரசாணையும் பிறப்பித்துள்ளது .

Tags:    

Similar News