அரசு, தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தக்கூடிய உள்கட்டமைப்பு திட்டங்கள் துவக்கம்
அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தபடக் கூடிய உள்கட்டமைப்பு திட்டங்களை வகைப்படுத்துதல், தர நிலைப்படுத்துதல் மற்றும் முன்னுரிமை படுத்தும் நடவடிக்கைகளுக்கான திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தொடங்கி வைத்தார். நிதித்துறை செயலாளர் (செலவினம்) வி. அருண்ராய் மற்றும் வெளிநாடு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் ஆசிய பசிஃபிக் பகுதியின் பொது இயக்குனர் ஜென்னி பேட்ஸ் ஆகியோர் முன்னிலையில் இத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.