கி.வா.ஜ என்றழைக்கப்பட்ட கி.வா.ஜகந்நாதன் பிறந்த நாளின்று
கலைமகள் என்ற இலக்கிய இதழை நடத்தி, பல புதிய படைப்பாளிகளை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திவர் கி.வா.ஜகந்நாதன்;
கி.வா.ஜ என்றழைக்கப்பட்ட கி.வா.ஜகந்நாதன் பிறந்த நாளின்று( 1906)
தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் சமயச்சொற்பொழிவாளர். இவர் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் மாணாக்கராவார். இவர் "கலைமகள்" என்ற இலக்கிய இதழை நடத்தி, பல புதிய படைப்பாளிகளை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
1967இல் இவரது "வீரர் உலகம்" என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. கம்பன் கழகம் இவரது நினைவாக கி.வா.ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.
இவரின் பல நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது. இவர் சொல்லின் செல்வராக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் சிலேடை புலியாகவும் இருந்தார்