குமாரபாளையத்தில் தொடங்கியது ஜல்லிக்கட்டு! 600 காளைகள் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வளையகாரனூர் பகுதியில், ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதில், 600 காளைகளும் 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்துள்ள வளையகாரனூர் பகுதியில், குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் 6வது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியினை திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் இளவரசி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்று வரும் இப்போட்டியில் 600காளைகளும்350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து ஆறு சுற்றுகளாக நடைபெறும் போட்டியில், மாடுகளை பிடிக்கும் வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளுக்கு இருசக்கர வாகனங்கள், பீரோ, கட்டில், சைக்கிள், தங்கம், வெள்ளிக்காசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் 6 மருத்துவக்குழுவினர் 500க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில், சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன், எம். பி. ராஜேஷ்குமார், மாவட்ட தி.மு.க செயலாளர் மூர்த்தி, நகர தி.மு.க செயலாளர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் வினோத் குமார், நிர்வாகிகள் ராஜ்குமார், சுகுமார், உள்ளிட்ட பலர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.