என் செருப்பு சைஸ் 41. தைரியம் இருந்த நேர்ல வா: குஷ்பு ஆவேசம்

குஷ்பு தம்பி இறந்தது குறித்து சென்னை கிழக்கு மாவட்ட திமுக ஐடி விங் நிர்வாகி பிரவீன் சிட்டி பதிவிற்கு குஷ்புவின் ஆவேசமான பதில்;

Update: 2022-12-19 16:12 GMT

குஷ்புவின் சகோதரர் அபுபக்கர் உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். என் மூத்த சகோதரர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். வெண்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அவருக்காக நீங்கள் எல்லாரும் வேண்டிக் கொள்ளுங்கள். பிரார்த்தனை செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இதை அடுத்து அவருக்கு அரசியல் கட்சி தலைவர்களும் , ரசிகர்களும் அவரது சகோதரர் உடல் நலம் பெற வாழ்த்துக்களும் குஷ்புவுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் சொல்லி வந்தனர்.

இந்த நிலையில் குஷ்புவின் சகோதரர் அபுபக்கர் நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அபுபக்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, ''உங்கள் அன்புக்குரியவர்கள் எப்போதும் உங்களுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் அளவுக்கு, விடைபெறும் நேரம் வரும். என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது. அவருடைய அன்பும் வழிகாட்டுதலும் எப்போதும் நமக்கு இருக்கும். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் சொல்வது போல், வாழ்க்கையின் பயணம் கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது. நிம்மதியாக இருங்கள் என்று தெரிவித்திருந்தார் குஷ்பு.

இதன்பின்னர் அபுபக்கர் என்று இல்லாமல் சிலர் அப்துல்லா என்று பதிவிட்டு வந்ததை அடுத்து, ''அவர் பெயர் அபுபக்கர். ஒருவரின் துக்கத்தில் தயவு செய்து கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் இருக்காதீர்கள். உங்கள் உணர்ச்சியற்ற அணுகுமுறை வேதனை அளிக்கிறது. அப்துல்லா எனது கடைசி சகோதரர், அவர் நன்றாக இருக்கிறார்'' என்று தெரிவித்திருந்தார்.

அபுபக்கரின் மறைவு குறித்து, ''நீங்கள் உறவுகளை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறீர்கள். உங்கள் அன்புக்குரியவர்கள் எப்போதும் உங்களுடன் இருப்பார்கள் என்று கருதுகிறீர்கள். அவர்கள் மறைந்தவுடன், வலி மிகவும் ஆழமானது. அது உங்கள் இதயத்தைத் துளைத்து, முன்பு இல்லாத அளவுக்கு உங்களுக்கு வலியை அளிக்கிறது. உங்கள் அன்புக்குரியவர்களை நீங்கள் உண்மையில் நேசிக்கிறீர்கள் என்று சொல்லத் தவறாதீர்கள்'' என்று சொல்லி இருந்தார்.

குஷ்புவை மட்டுமல்லாது பாஜகவில் இருக்கும் கௌதமி, நமீதா, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட நடிகைகளையும் திமுக மேடையில் அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் கடுமையாக விமர்சித்து இருந்தார் திமுக பேச்சாளர் சைதை சாதிக். இந்த விவகாரத்தில் அவர் உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.

குஷ்பு இப்படி உறவை இழந்து மனத்துயரில் இருக்கும்போது, சென்னை கிழக்கு மாவட்ட திமுக ஐடி விங் நிர்வாகி பிரவீன் சிட்டி, ''அக்காவுக்கு சின்னத்தம்பி நினைப்பு வந்துடுச்சு'' என்று கமெண்ட் அடித்துள்ளார்.

இதைக்கண்டு ஆவேசம் அடைந்த குஷ்பு, ''என் செருப்பு சைஸ் 41. தைரியம் இருந்த நேர்ல வா. இதுதான் உங்க கீழ்த்தனமான புத்தி. மாறவே மாட்டீ ங்களாடா? நீயெல்லாம் கலைஞரை பாலோ செய்யறேன்னு சொல்லிக்க வெட்கப் படணும். இவர் திமுக கட்சி உறுப்பினர். இவர்களால் இதைவிடத்தரம் தாழ்ந்து போய்விட முடியுமா?''என்று கேட்டிருக்கிறார்.

Tags:    

Similar News