குஷ்பு விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் வரை நீளுமா மகளிர் ஆணைய விசாரணை கரம்

குஷ்பு புகார் செய்தால்முதல்வர் ஸ்டாலின் வரை மகளிர் ஆணைய விசாரணை கரம் நீளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2022-10-30 11:59 GMT

மு.க. ஸ்டாலின் -குஷ்பு

பெண்கள் விஷயத்தில் தி.மு.க. தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. முதலில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி, அடுத்து முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராஜா எம்.பி., அதற்கு அடுத்து அமைச்சர் பொன்முடி என வரிசையாக ஒவ்வொருவராக பெண்கள் பற்றி பேசி சர்ச்சைகள் சிக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது சமீபத்தில் இந்த பட்டியலில் சேர்ந்து இருப்பவர் தி.மு.க.வின் மேடைப் பேச்சாளர் ஒருவர். சென்னையைச் சேர்ந்த இவர் பிரபல நடிகையும் பா.ஜ.க.வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களில் ஒருவருமான கனிமொழியை பற்றி நா கூசும் வகையில் பேசிய பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. அவரின் இந்த பேச்சுக்கு பல்வேறு பெண்கள் நல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

தி.மு.க. முன்னணி தலைவர்கள் தரப்பில் இதற்கு யாரும் எந்த பதிலும் சொல்லாத நிலையில் தி.மு.க.துணை பொது செயலாளர் கனிமொழி எம்.பி. மட்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் குஷ்புவிற்காக வருத்தம் தெரிவித்து ஒரு கருத்தை பதிவிட்டு இருந்தார். மேலும் பெண்களை தங்களது தலைவர் என்றும் மதிக்க தவறியது இல்லை. ஆதலால் இது போன்ற பேச்சுக்கள் வருத்தம் அளிப்பதாக குறிப்பிட்டு இருந்தார். இந்த கருத்திற்கு குஷ்பவும் நன்றி தெரிவித்து ஒரு பதிவினை போட்டு இருந்தார்.

ஆனாலும் இந்த பிரச்சனையை குஷ்பு எளிதாக விடப் போவதில்லை. இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

என்னைப்பற்றி இப்போது மேடையில் மோசமாக பேசியதை தமிழகமே கேட்டுள்ளது. பேசியவர் மன்னிப்பு கேட்டதால் பிரச்சினையை விட்டு விடும்படி தி.மு.க.வை சேர்ந்த சிலர் சொல்கிறார்கள். அவர்களிடம் நான் கேட்பது உங்கள் குடும்பப் பெண்களை பற்றி இப்படி பேசினால் சும்மா இருப்பீர்களா? இந்த பிரச்சினையால் எனது மனது எவ்வளவு பாதித்திருக்கும் என்பதை ஒவ்வொரு பெண்ணும் புரிந்து கொள்வார்கள். எனக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இந்த பிரச்சனையை தைரியமாக நீ என்ன செய்தாய் என்று கேட்டால் நான் என்ன சொல்வது? என்னை ரோல் மாடலாக ஏற்றுள்ள பெண் குழந்தைகள் எதிர்காலத்தில் தைரியமாக பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். எனவே இதை நான் சும்மா விடமாட்டேன். தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்வேன். பொது மேடையில் கேவலமாக பேசியவர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காலையில் எழும்போது கட்சிக்காரர்கள் இன்றுஎன்ன பிரச்சினையை இழுத்து வைத்து உள்ளார்களோ என்று நினைத்து தூக்கம் இன்றி தவிப்பதாக கூறியிருந்தார். அவர் நினைத்தது போலவே அவரது கட்சிக்காரர் இப்போது கீழ்த்தரமாக பேசி இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து கட்சியை விட்டு ஏன் நீக்கவில்லை. மாநிலத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு முதலமைச்சருக்கு உள்ளது. எதற்கெடுத்தாலும் கண்டனம் தெரிவிக்கும் கட்சிகள் இந்த பிரச்சினையில் வாய் திறக்காமல் உள்ளன .இதை நான் சாதாரணமாக விடமாட்டேன் இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்தால். இந்த விவகாரத்தை மகளிர் ஆணையம் தீவிரமாக எடுத்து விசாரணை நடத்தும் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால் மேடையில் பேசிய தி.மு.க. பேச்சாளர் முதலமைச்சர் ஸ்டாலினை சம்பந்தப்படுத்தியும் பேசியிருக்கிறார்.ஆதலால் தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணை கரங்கள் ஸ்டாலின் வரை நீண்டாலும் நீளலாம் என்பதில் சந்தேகம் இல்லை.

Tags:    

Similar News