நடிகை குஷ்புவிடம் கனிமொழி எம்.பி. எதற்காக மன்னிப்பு கேட்டார் தெரியுமா?

Kanimozhi MP news, Kanimozhi mp apologise, actress Khushbuபெண்கள் குறித்து தி.மு.க.வினர் தெரிவித்த அவதூறு கருத்துக்கு நடிகை குஷ்புவிடம், கனிமொழி எம்.பி. மன்னிப்பு கேட்டுள்ளார்.

Update: 2022-10-27 13:19 GMT
நடிகை குஷ்பு, கனிமொழி எம் பி.

Kanimozhi MP news, Kanimozhi mp apologise, actress Khushbuசமூக வலைதளங்களில் முக்கியப் பிரமுகர்கள் தெரிவிக்கும் கருத்துகள் அவ்வப்போது சர்ச்சையை எழுப்புவது உண்டு. மேலும், பொதுவான பிரச்சினைகள், பாதிப்புகள், போராட்டங்கள், வேண்டுகோள் உள்ளிட்டவை குறித்து முக்கியப் பிரமுகர்கள் தெரிவிக்கும் கருத்து டிரென்டிங் ஆவதும் வாடிக்கையான நிகழ்வு.

Kanimozhi MP news, Kanimozhi mp apologise, actress Khushbuஇதுதவிர, அரசியலில் எதிர் எதிர் துருவங்களில் பயணிக்கும் பிரபலங்கள் தங்களது கருத்துக்களை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலையகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஒரு கட்சியைச் சேர்ந்த பிரபலம் ஏதாவது ஒரு முக்கியப் பிரச்சினைகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு மாற்று கட்சியைச் சேர்ந்த பிரபலங்களும் பதில் அளிப்பது உண்டு.

Kanimozhi MP news, Kanimozhi mp apologise, actress Khushbuஅந்த வகையில், பாரதிய ஜனதா கட்சியில் உள்ள பெண் நிர்வாகிகள் குறித்து தி.மு.க. நிர்வாகிகள் சிலர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாக எழுந்த புகாருக்கு பலரும் பதில் அளித்து வருகின்றனர். இதுதொடர்பாக, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும், நடிகையுமான குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

Kanimozhi MP news, Kanimozhi mp apologise, actress Khushbuஅதில், ஆண்கள் பெண்களை துஷ்பிரயோகம் செய்தால், அது அவர்கள் வளர்த்த விதமான வளர்ப்பையும், அவர்கள் வளர்ந்த நச்சு சூழலையும் காட்டுகிறது. இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். அத்தகைய ஆண்கள் தங்களை கலைஞரை பின்பற்றுபவர்கள் என்று கூறி கொள்கிறார்கள். இந்த புதிய திராவிட மாடல் தான் முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஆட்சியில் உள்ளதா? என கேள்வி எழுப்பி இருந்தார். மேலும், இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோரை நோக்கியும் அவர் கேட்பது போன்று பதிவிட்டு இருந்தார்.

Kanimozhi MP news, Kanimozhi mp apologise, actress Khushbuநடிகை குஷ்பு தெரிவித்த இந்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில், தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ஒரு சக மனிதராகவும் பெண்ணாகவும் தான் மன்னிப்பு கேட்பதாகவும், கட்சி வேறுபாடின்றி இந்த நடத்தையை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தனது தலைவரும் கட்சியும் இத்தகைய தவறை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் கனிமொழி கருணாநிதி எம்.பி. தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Kanimozhi MP news, Kanimozhi mp apologise, actress Khushbuசமூக வலைதளத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த நடிகை குஷ்புவும், தி.மு.க.வைச் சேர்ந்த கனிமொழியும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் திட்டிக் கொள்ளாமல் பெண்கள் தொடர்பான கருத்தில் மென்மையான முறையில் கையாண்டதற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Kanimozhi MP news, Kanimozhi mp apologise, actress Khushbuபாரதிய ஜனதா கட்சியில் உள்ள நடிகை குஷ்பு அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவர். இதற்கு முன்பு 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை தி.மு.க.வில் பயணித்தார். பின்னர், அங்கிருந்து விலகி தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்ட நடிகை குஷ்பு சில காலம் மட்டுமே அங்கு பயணித்தார்.

Kanimozhi MP news, Kanimozhi mp apologise, actress Khushbuபின்னர், 2020 ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகிய நடிகை குஷ்பு பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார். அரசியல் மட்டுமின்றி தொடர்ச்சியாக சினிமாவிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளும் அவர் தலை காட்டி வருகிறார்.

Tags:    

Similar News