ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையிடம் தவறாக நடக்க முயன்ற நபர் கைது
சென்னை ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையிடம் தவறாக நடக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.;
கைது செய்யப்பட்ட சந்திரகாசன்.
சென்னை ஆதம்பாக்கம் கருணீகர் தெருவில் கடந்த 10ம் தேதி இரவு பணி முடிந்து வீடு திரும்பிய பைக் வீராங்கனை நிவேதா என்ற இளம்பெண்ணை பின் தொடர்ந்து வந்து ஆபாசமாக பேசி, செல்போனை பறிக்க முயன்றதாக நிவேதா ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசாரின் தீவிர தேடுதலில் சி.சி.டி.வி. காட்சிகளை பல கிலோ மீட்டர் தொலைவிற்கு ஆய்வு செய்து சென்று, இன்று புளியதோப்பை சேர்ந்த சந்திரகாசன்(34) என்ற பைக் டாக்சி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் இது போல் தனியாக செல்லும் பெண்களை பின்தொடர்வதை வாடிக்கையாக கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.