சென்னை ஆதம்பாக்கம் ஹார்டுவேர்ஸ் கடையில் இன்று திடீர் தீ விபத்து
சென்னை ஆதம்பாக்கம் ஹார்டுவேர்ஸ் கடையில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.;
சென்னை ஆதம்பாக்கத்தில் முகமது(45) என்பவருக்கு சொந்தமான கே.எம்.ஹார்டுவேர்ஸ் கடையில் இன்று மதியம் 2.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மதியம் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்ற நிலையில் கடையில் இருந்து புகை வந்துள்ளது. இதனை கண்டவர்கள் முகமதிடம் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, தகவலறிந்து கிண்டி, வேளச்சேரி, தேனாம்பேட்டை, தாம்பரம், திருவல்லிகேணி, அசோக்நகர் என 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 1.30 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதனால் மேடவாக்கம் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பகுதி முழுவதும் புகை மண்டலமானது, அப்பகுதி மக்கள் வேடிக்கை பார்ப்பதற்காக குவிந்தனர்.
ஹார்டுவேர் கடையில் பற்றிய தீயில் பெயிண்ட் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்தது, அருகில் மருத்துவமனையில் தீ பரவி கண்ணாடி மட்டும் சேதமானது.மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.சம்பவம் தொடர்பாக ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.