கொரோனா விதிமீறல் : கமல்ஹாசனிடம் விளக்கம்கோர அரசு முடிவு

கொரோனா நடைமுறையை மீறிய கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.;

Update: 2021-12-06 07:30 GMT

கமல்ஹாசன்

நடிகரும், மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனுக்கு, கொரொனா தொற்று அறிகுறி தென்பட்டது. இதை தொடர்ந்து, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில், கடந்த மாதம் 22ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து அந்த மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன், தொற்றில் இருந்து முழுமையாக மீண்டார். இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடு திரும்பினார்.

இதனிடையே, வீட்டு தனிமையில் இருக்க வேண்டும் என்று, மருத்துவர்கள் கமல்ஹாசனை அறிவுறுத்திய நிலையில், அவ்வாறு இல்லாமல் பொதுநிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. இது , கொரோனா நடைமுறைகளை மீறிய செயல் என்று சர்ச்சைகள் எழுந்தன.

இது குறித்து, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், பொது நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்றது குறித்து, சுகாதாரத்துறை சார்பில் உரிய விளக்கம் கேட்கப்படும். மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலும், அதன்பின் 7 நாட்கள் வீட்டுத்தனிமையில் இருக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News