காளி அம்மன் சிகரெட் பிடிக்கும் போஸ்டர்: ஆவணப்பட இயக்குனருக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு...!

Smoking Poster - காளி அம்மன் சிகரெட் பிடிக்கும் போஸ்டர் வெளியிட்ட காளி ஆவணப்படத்தின் இயக்குனர் மணிமேகலைக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Update: 2022-07-04 06:34 GMT

ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை. அடுத்த படம்: சிகரெட் பிடிக்கும் காளி அம்மன் படம் போஸ்டர்

Smoking Poster - கனடா நாட்டில் உள்ள ஆவணப்பட திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை. இவர், செங்கடல், மாடத்தி போன்ற தன் படங்களால் கவனம் பெற்றவர். டோரோண்டோ மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம், கனடாவில் திரைப்பட பயிற்சி பெறும் மாணவர்கள் சிலரை தேர்தெடுத்து கனடா நாட்டின் பன்முக கலாசாரத்தை பற்றிய படங்களை எடுக்கும் முகாமை ஏற்பாடு செய்தது. இந்த டோரோண்டோ மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம் முகாமில் கலந்து கொண்டு ஆவணப்பட இயக்குனர் எடுத்த படம் தான் காளி. இந்த படத்தில் காளியாக நடித்து இயக்கி தயாரித்தவர் தான் லீனா மணிமேகலை.

காளி சிகரெட் புகைப்பது போன்று வெளியிடப்பட்டுள்ளது ஒரு பரபரப்பு போஸ்டர். காளி டாக்குமென்டரி படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்த லீனா மணிமேகலை, டோரோண்டோ நகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம் என்றும் இந்த படத்தை ரசிகர்கள் பார்த்தால் arrest leena manimekalai என்று ஹேஷ்டேக் பதிவிடாமல், love you leena manimekalai என்று பதிவிடுவார்கள் என்றும் அவ்வளவு இன வேற்றுமைகளுக்கு மத்தியிலும் வெறுப்பை தேர்ந்தெடுக்காமல் நேசத்தை தேர்ந்தெடுக்கிறதை குறித்து பேசுபவள் இந்தக் காளி என்றும் அவள் இன்னும் பேசுவாள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்துக்களின் கடவுளான மகா காளி, சிகரெட் புகைப்பது போன்றும், ஒரு கையில் எல்.ஜி.பி.டி சமூகத்தின் கொடியை ஏந்தியபடியும் இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இது, இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் உள்ளதாக இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்துக்கள் மனம் புண்பட்டுள்ளது எனவும், ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும்; அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News