70,000- க்கும் அதிகமான தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் -டிஎல்எஃப் டௌன்டவுன்
டிஎல்எஃப் டௌன்டவுன் சென்னை தரமணியில் உள்ள தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் நுட்பவியலுக்கான பூங்காவில் "ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ்க்காக உருவாக்கப்படும் இரண்டாவது கட்ட மிகப்பெரிய உலகளாவிய வளாகத்திற்கான அடிக்கல்லை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 14ஆம் தேதி மார்ச் மாதம், 2022ம் ஆண்டு திறந்து வைத்தார். டிட்கோ மேற்கொள்ளும் இந்த கூட்டு முயற்சி செயல்திட்டத்தில், ரூ.50 கோடி முதலீட்டு பங்குடன், இந்த ஐடி மற்றும் ஐடிஇஎஸ் பூங்காவானது 6.8 மில்லியன் சதுர அடி பரப்பில், 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ளது. ரூ.5000 கோடி என்ற மொத்த முதலீட்டைக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் செயல்திட்டத்தில், டிஎல்எஃப் நிறுவனம் அத்தொகையை படிப்படியாக தேவைப்படும் காலகட்டங்களில் முதலீடு செய்யும்.
முன்மொழியப்பட்ட ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ்"-ன் இரண்டாம் கட்ட கட்டிடம், பணியாளர்களுக்கென நலவாழ்வு மையம் மற்றும் உடற்பயிற்சி நிலையம், சிற்றுண்டி உணவகங்கள், குழந்தைகள் காப்பகம், அங்காடி, கருத்தரங்கு மற்றும் கூட்ட அரங்குகள் மற்றும் பிரத்யேக உணவு கூடங்கள் போன்ற பல்வேறு வசதிகளை இந்த டிஎல்எஃப் டௌன்டவுன் வடிவமைக்க உள்ளது. இந்த கட்டிட வளாகம் பாரம்பரியமாகவும், அலுவலகங்களிலிருந்து மாறுபட்டு பணியாற்றுவதற்கான சிறப்பான மாற்று அமைவிடங்களை கொண்டுள்ளது. மேலும், இங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு புத்துணர்ச்சியை வழங்கவும் மற்றும் சமூக கலந்துரையாடலை ஊக்குவிப்பதற்கும் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.
செயல்படுத்தப்பட்டு வரும் இந்த டௌன்டவுன் திட்டமானது. சுமார் 70,000- க்கும் அதிகமான தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்குவதை ஏதுவாக்கும். இத் தகவலை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.