அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.;
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளராக இருந்தவர் காசி. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இவருடைய வீட்டில் இன்று காலை வருமான வரி துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக மின்சார வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி பின்னர் ஓய்வு பெற்றவர். அவர் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இதற்கு முன்பு உதவியாளராக பணியாற்றி உள்ளார்.
சென்னையின் துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, நாவலூர், ஓ.எம்.ஆர்., எண்ணூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்சார வாரியத்திற்கு ஒப்பந்தம் அளித்ததில் நடந்த முறையில் தொடர்பாக வருமானவரித்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி இல்லத்தில் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்த சோதனைக்கு பின்னரே அவரது வீட்டில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகும்