நடிகர் ரஜினிகாந்த் தமிழக கவர்னராக நியமிக்கப்பட உள்ளாரா?

நடிகர் ரஜினிகாந்த் தமிழக கவர்னராக நியமிக்கப்பட இருப்பதாக ஆங்கில தொலைக்காட்சி பிரேக்கிங் நியூஸ் வெளியிட்டுள்ளது.

Update: 2022-08-23 11:59 GMT

நடிகர் ரஜினிகாந்த்.

தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வரவில்லை என பலமுறை கூறிவிட்டாலும், தமிழக அரசியல் அவரை விடுவதாக தெரியவில்லை. அதனால் தான் அவர் அடிக்கடி அரசியல் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தனது உடல் நிலையை காரணம் காட்டி நான் அரசியலுக்கு வர மாட்டேன் என திட்டவட்டமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்த ரஜினிகாந்த் சிறிது காலம் அரசியல் சர்ச்சையில் சிக்காமல் இருந்தார்.


இந்நிலையில் கடந்த வாரம் அவர் தமிழக கவர்னர் ஆர். என். ரவியை சந்தித்தது மீண்டும் அவரை அரசியல் வளையத்திற்குள் தள்ளிவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆளுநர் ரவியை சந்தித்து விட்டு வெளியே வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் ஆளுநர் பதவியை வாயாரப் புகழ்ந்தார். அவர் தமிழக மக்களுக்காக பாடுபடுவதாக குறிப்பிட்டார். மேலும் தாங்கள் இருவரும் அரசியல் பேசிக் கொண்டதாகவும் ஒரு கருத்தை தெரிவித்ததோடு நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்றும் கூறினார்.

அவரது இந்த பேட்டி வழக்கம் போலவே குழப்பமாக இருந்தாலும் அந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரபல ஆங்கில தொலைக்காட்சி இந்தியா டுடே இன்று மாலை ஒரு பிரேக்கிங் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தமிழக ஆளுநராக நடிகர் ரஜினிகாந்த் நியமிக்க படலாம் என்று ஒளிபரப்பப்பட்டு உள்ளது. இதற்கு ஆதாரமாக ஆளுநர் ரவி- ரஜினிகாந்த் சந்திப்பு செய்தியையும் சந்திப்புக்கு பின்னர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியும் ஒளிபரப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசு நினைத்தால் யாரை வேண்டுமானாலும் எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் ஆளுநராக நியமிக்கலாம் என்பது தற்போதைய நிகழ்வுகளாக அப்போது நடந்து வருகிறது. அதை வைத்து பார்க்கும்போது இதுவும் நடக்குமோ என்ற கேள்வி தான் எழுந்துள்ளது.

Tags:    

Similar News