17 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்; மதுரை, நெல்லை கமிஷனர்கள் யார்?
தமிழ்நாட்டில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தென்மண்டல ஐ.ஜி.யாக அஷ்ரா கார்க், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.;
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசு பணியில் இருந்து திரும்பிய அஸ்ரா கார்க் தென் மண்டல ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், தென் மண்டல ஐ.ஜி-யாக இருந்த டி.எஸ்.அன்பு, சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக இடமாற்றம் செய்யப்படுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனராக சந்தோஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாநகர போலீஸ் கமிஷனராக டி.செந்தில்குமார், சென்னை அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக ஏ.டி.துரை குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.