மீன்வளப் பல்கலைக்கழகத்தில் சேர இணையவழி மூலம் விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-11-03 07:55 GMT

பைல் படம்

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக பதிவாளர் பெலிக்ஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்கு 01.11.2023 முதல் விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பிற்கு 13 பிரிவுகளும், முதுகலை மீன்வளப்படிப்புக்கு 13 பிரிவுகளும், முதுகலை தொழில்நுட்பப்படிப்புக்கு 3 பிரிவுகளும், முதுகலை மீன்வள வணிக மேலாண்மை மற்றும் முதுகலை பட்டயப்படிப்பு 2 பிரிவுகளிலும் உள்ளன.

இந்த ஆண்டிற்கு முனைவர் பட்டப்படிப்புக்கு 31 இடங்களும், முதுகலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பிற்கு 52 இடங்களும், முதுகலை தொழில்நுட்ப படிப்புக்கு 13 இடங்களும், முதுகலை மீன்வள வணிக மேலாண்மை பட்டப்படிப்புக்கு 20 இடங்களும், முதுகலை பட்டயப்படிப்புக்கு 20 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த கல்வியாண்டிற்கான முதுகலை மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தை 01.11.2023 அன்று தொடங்கி உள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் முதுகலை மாணவர் சேர்க்கைக்கான கையேட்டினை பல்கலைக்கழத்தின் இணையதளம் (www.tnjfu.ac.in) மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசிநாள் 30.11.2023 ஆகும். பூர்த்தியான விண்ணப்பங்கள் தபால் மூலமாக சமர்ப்பிக்கப்பட வேண்டியதில்லை.

விண்ணப்பித்த மாணவர்களுக்கு தகுதித் தேர்வு மற்றும் நேரடி கலந்தாய்வானது முறையே 13.12.2023 மற்றும் 14.12.2023 ஆகிய நாட்களில் பொன்னேரியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வைத்து நடைபெறும்.

விண்ணப்பத்தாரர்களுக்கு தேவையான அனைத்து விபரங்களும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் பேராசிரியர் மற்றும் இணையதள மேற்பார்வையாளரான சுஜாத்குமாரை sujathkumar@tnfu.ac.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ 9443126894 தொலைபேசி மூலமாகவோ வேலைநாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை பணி நேரங்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News