அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமானவரித்துறை ரெய்டு
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்;
அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவர்கள் உறவினர்களுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சமீபத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் சிறப்பு குழு அமைக்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக ஆளுநரிடம் பா.ஜ., தலைவர் அண்ணாமலை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு ஒன்றை அளித்தார். அதிமுக பொதுசெயலர் எடப்பாடி பழனிசாமி, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும் வலியுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று ரெய்டு நடந்து வருகிறது. சென்னை, கோவை, கரூர் மற்றும் முக்கிய இடங்களில் இந்த ரெய்டு நடப்பதாக தெரிகிறது.
டாஸ்மாக் மூலம் பலகோடி ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான் இடங்களில் வருமான வரித்துறை அதிகார்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனைக்கு அமைச்சரின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்