காவல் துறை கைது செய்தால்.. உங்களின் உரிமைகள் என்ன?

காவல் துறையால் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரின் உரிமைகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

Update: 2022-03-07 09:04 GMT

காவல் துறையால் ஒருவர் கைது செய்யப்பட்டால் காவல்துறையின் கடமைகள் மற்றும் கைது செய்யப்பட்டவரின்  உரிமைகள் என்னென்ன என்பதை உயர்நீதிமன்ற தகவலின்படி தற்போது அறிந்துகொள்வோம்.

உரிமைகள்:

  • கைதுக்கான காரணங்களை போலீசார் தெரிவிக்க வேண்டும். 
  • பிடிப்பாணையின் (Warrant) பேரில் கைது செய்யப்பட்டிருந்தால், அதனை பார்க்க கைதானவருக்கு உரிமை.
  • விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கைதானவர் கலந்தாலோசிக்கலாம்.
  • கைதான 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்த வேண்டும்.
  • பிணையில் (Bail) விடுவிக்கப்படக் கூடியவரா என்பதை அவருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
  • உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோ அல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராகவோ இருந்தால் மட்டுமே கைது செய்ய விலங்கிட வேண்டும். இல்லையேல் கூடாது.
  • நீதி மன்றத்தின் தீர்ப்பு வரும் வரை குற்றவாளியாக ( Convict ) கருத முடியாது.

காவலில் வைத்தல்:

  • கைது செய்யப்பட்டவரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு மட்டுமே அதிகாரம். 

உச்ச நீதி மன்ற உத்தரவுகள்:

  • ஒருவரை கைது செய்யும் அதிகாரிகள் அடையாள அட்டையை பொருத்தியிருக்கவேண்டும்.
  • அதே இடத்தில் கைது குறிப்பு எழுத வேண்டும்
  • தகவலை உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ 8 முதல் 12 மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும்.
  • கைது செய்யப்பட்டவர் தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமையை அவருக்கு தெரிவிக்க வேண்டும்.
  • 48 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை சோதனை.
  • விசாரணையின்போது வழக்கறிஞர் உடன் வைத்துக்கொள்ள அனுமதி.

இவைகளை நடைமுறைப்படுத்தாத பட்சத்தில் என்ன செய்வது?

காவல்துறை முடிந்தவரை இதனை செய்யும். அப்படி இல்லையென்றால் வழக்கறிஞர் மூலம் கோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்வதினால், காவல் துறை அதிகாரியை நீதிமன்றம் கண்டிக்கலாம். அல்லது  குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை கூட செய்யலாம்.

Tags:    

Similar News