'நான் நல்லாயிருக்கேன்'- வீடு திரும்பியதும் ரஜினிகாந்த் ஆடியோ வெளியீடு

'நான் நல்லாயிருக்கேன்' என நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பியதும் ஆடியோ வெளியிட்டு உள்ளார்.

Update: 2021-11-01 03:27 GMT

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினி காந்த் திடீர் உடல் நலகுறைவு காரணமாக கடந்த  28  -ந்தேி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் ஏற்பட்ட பிரச்சினைக்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் ரஜினிகாந்த பூரண குணம் அடைந்து நேற்று நள்ளிரவு வீடு திரும்பினார். வீடு திரும்பியதும் ரஜினிகாந்த் தான் பேசிய ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில்  'அனைவருக்கும் வணக்கம். சிகிச்சை முடிந்தது. நான் நல்லாயிருக்கேன்.இன்று இரவு தான் வீட்டிற்கு வந்தேன். எனது ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் , ரசிக பெருமக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மற்
றும் எனது நலன் பற்றி விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி' என குறிப்பிட்டு உள்ளார்.

இந்த ஆடியோ ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதோடு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக பரவி வருகிறது.


Tags:    

Similar News