EPFO-ல் உங்கள் நாமினியை ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) கணக்கில் உங்கள் நாமினியை ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி என தெரிந்துகொள்வோம்.

Update: 2022-05-17 04:42 GMT

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) கணக்கு வைத்திருந்தால் உங்கள் PF கணக்கை நாமினியை வீட்டில் இருந்தே அப்டேட் செய்யலாம். இதற்காக நீங்கள் எந்த அலுவலகத்திற்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) இணையதளத்தின் மூலம் EPF உறுப்பினர்கள் தங்கள் நாமினியை ஆன்லைனிலும் திருத்தம் செய்யலாம். இந்த வசதியை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தற்போது வழங்கியுள்ளது. இதில் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் நாமினியின் பெயரை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.

நாமினியை அப்டேட் செய்வது எப்படி?

  1. ஆன்லைனில் நாமினியை நிரப்ப, EPFO ​​இணையதளமான epfindia.gov.in க்குச் செல்லவும்.
  2. இதன் பின் சர்வீஸ் ஆப்ஷனுக்கு சென்ற பின் டிராப் டவுனில் For Employees என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. பின்னர் UAN/Online Service (OCS/OTCP) என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. உங்கள் UAN மற்றும் கடவுச்சொல் மூலம் இங்கே உள்நுழையவும்.
  5. உங்கள் குடும்ப விபரங்களை புதுப்பிக்க Yes என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. பின்னர் Add Family Details என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. இதில், நாமினேஷன் விவரங்களைக் கிளிக் செய்து, பகிரப்பட வேண்டிய மொத்தத் தொகையை உள்ளிடவும்.
  8. இதற்குப் பிறகு Save EPF nomination என்பதைக் கிளிக் செய்யவும்.
  9. OTP ஐ உருவாக்க E-Sign ஐ கிளிக் செய்யவும்.
  10. இதனுடன், உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
  11. OTP கிடைத்தவுடன் அதைச் சமர்ப்பிக்கவும், உங்கள் மின்-நாமினேஷன் பதிவு செய்யப்படும்.
  12. இதில் ஒன்றுக்கு மேற்பட்ட நாமினிகளையும் சேர்க்கலாம், இதற்கு எந்த ஆவணமும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
Tags:    

Similar News