இது உங்களுக்கு முக்கியமுங்க..ஆதார் பயோமெட்ரிக்கை லாக், அன்லாக் செய்து பழகுங்க

தவறான பயன்பாட்டைத் தடுக்க ஆதார் பயோமெட்ரிக்கை லாக் மற்றும் அன்லாக் செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்வோம்.

Update: 2022-05-13 11:29 GMT

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை நாட்டின் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. பல்வேறு அரசு நலத்திட்டங்கள், ஓட்டுநர் உரிமம் பெறுதல், வங்கிக் கணக்கு தொடங்குதல் உள்ளிட்ட அனைத்து அரசு சேவைகளையும் பெறுவதற்கு ஆதார் கார்டு அவசியம். இதில் 12 இலக்க எண், பெயர், பிறந்த தேதி, பாலினம் மற்றும் பல தரவுகள் உள்ளடக்கியுள்ளது.

கைரேகை மற்றும் கண் கருவிழி தரவு போன்ற ஆதார் பயோமெட்ரிக்கை லாக் மற்றும் அன்லாக் செய்வதற்கான வசதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஏற்படுத்தியுள்ளது. இந்த வசதி தரவு தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க  தொடங்கப்பட்டது. ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரும் இந்த வசதியைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். ஆதார் வைத்திருப்பவர் தங்கள் பயோமெட்ரிக்ஸை (கைரேகைகள்/கருவிழி) அங்கீகாரத்திற்காக பயன்படுத்த முடியாது என்பதை உறுதி செய்கிறது.

பயோமெட்ரிக்கை லாக் செய்த பிறகு, பயோமெட்ரிக் முறையை (கைரேகை/கருவிழி) பயன்படுத்தி அங்கீகாரச் சேவைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்துவதற்கு UID பயன்படுத்தப்பட்டால், பயோமெட்ரிக்ஸ் பூட்டப்பட்டிருப்பதைக் குறிக்கும் ஒரு குறிப்பிட்ட பிழைக் குறியீடு 330' indicating biometrics are locked' என்பதை தெரியப்படுத்தும். ஒருவர் பயோமெட்ரிக் லாக்கிங் முறையை இயக்கியவுடன், ஆதார் வைத்திருப்பவர் அன்லாக்கை தேர்ந்தெடுக்கும் வரை அவர்களின் பயோமெட்ரிக் பூட்டப்பட்டிருக்கும்.

ஆதார் பயோமெட்ரிக்கை லாக் மற்றும் அன்லாக் செய்வது எப்படி?

  • UIDAI அதிகாரப்பூர்வ இணையதளமான https://uidai.gov.in/  என்ற முகவரியில் பார்வையிடவும்.
  • My Aadhaar சென்று 'Aadhaar Service' தேர்ந்தெடுக்கவும்.
  • லாக்/அன்லாக் பயோமெட்ரிக்ஸ் என்பதைக் கிளிக் செய்யவும்.
  • 'Lock/Unlock' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அடுத்த வலைப்பக்கத்தில், உங்களின் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.
  • captcha code உள்ளிடவும்.
  •  Send OTP என்பதைக் கிளிக் செய்யவும், அது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.
  •  பயோமெட்ரிக் தரவை lock/unlock விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

இந்த சேவையைப் பெற பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் அவசியம். உங்கள் மொபைல் எண் ஆதாருடன் பதிவு செய்யப்படவில்லை என்றால், நீங்கள் அருகில் உள்ள பதிவு மையம்/மொபைல் அப்டேட் எண்ட் பாயிண்டிற்குச் சென்று உங்கள்  எண்ணைப் புதுப்பிக்கலாம்.

Tags:    

Similar News