உங்கள் மொபைல் எண்ணை மின் கட்டண எண்ணுடன் இணைப்பது எப்படி?

உங்கள் மொபைல் எண்ணை மின் கட்டண எண்ணுடன் இணைத்து குறுஞ்செய்தியை எப்படி பெறுவது என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

Update: 2022-03-03 02:30 GMT

நமது வீட்டின் மின் கட்டணம் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் வாரியத்தால் கணக்கிடப்படுகிறது. அவ்வாறு கணக்கிடப்படும் மின் கட்டணத்தை கணக்கிடும் ஊழியர் நமது அட்டையில் எழுதிவிட்டு சென்று விடுவார். ஆனால் நமக்கோ வேலை பளு காரணமாக மறந்து விடுவோம்.

இதனால் அதில் குறிப்பிட்டுள்ள கட்டண கடைசி தேதியை பார்க்க தவறவிட்டு மின் இணைப்பு துண்டிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படும். மேலும் அபராதத்துடன் மின் கட்டணத்தை செலுத்த வேண்டி வரும்.

இதனை தவிர்க்க நமது மொபைல் எண்ணை மின் கட்டண எண்ணுடன் இணைத்துவிட்டால், அந்த எண்ணுக்கு குறுஞ்செய்தியாக கட்டணத் தொகையுடன் கூடிய விபரங்கள் வந்து சேரும். இதனால் தங்களின் மின் கட்டணத்தைக் கடைசித் தேதிக்கு முன்பாகச் செலுத்த உதவியாக இருக்கும்.

அதேபோல் மாதாந்திர பராமரிப்பு காரணமாக மாதந்தோறும் ஒரு நாள் மின்வாரியத்தால் மின்சாரம் துண்டிக்கப்படும். இந்த தகவலை அறியாமல் நாம் பல வேலைகளை முடிக்க முடியாமல் நாம் சிரமப்பட்டு வருகிறோம். இதற்காகவும் மின் வாரியத்தால் நமது மொபைல் எண்ணுக்கு முன்னதாகவே மின் நிறுத்தம் குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

உங்களது மொபைல் எண்ணை 2 வழிகளில் மின் கட்டண எண்ணுடன் இணைக்கலாம். உங்கள் பகுதி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று மின் இணைப்பு விபரங்களுடன் மொபைல் எண்ணை குறிப்பிட்டு விண்ணப்பத்தினை அளித்தால் கணினியில் பதிவு செய்து விடுவார்கள். நீங்கள் இணையதளம் மூலமாகவும் உங்கள் மொபைல் எண்ணை இணைக்கலாம்.

மொபைல் எண்ணை இணைப்பது எப்படி?

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் https://www.tnebnet.org/awp/login என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும்.


பின்னர் login காலத்தில் Register here என்பதை கிளிக் செய்ய வேண்டும்.


அடுத்து வரும் service no காலத்தில் Existing Service Connection Number என தேர்ந்தெடுக்க வேண்டும்.


இதனையடுத்து Region என்பதில் select செய்து 9 பிராந்தைகளில் உங்களுடைய பிராந்திய நம்பரை தேர்ந்தெடுக்க வேண்டும்.




இதனைத்தொடர்ந்து உங்களுடைய மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்களை உள்ளீடு செய்து பதிவு செய்தால், நமது மொபைல் எண் நமது மின் கட்டண எண்ணுடன் இணைக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி திரையில் வரும்.

இனி உங்களுடைய மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்திகள் வரத்தொடங்கிவிடும். இதுமட்டுமல்லாமல் உங்களுடைய மொபைலிலேயே மின்வாரியத்தின் செயலியை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.

Tags:    

Similar News