மழைக்காலத்தில் வீட்டில் மின் பாதுகாப்பு முக்கியம்ங்க : வாங்க பாக்கலாம்

மழைக்காலத்தில் வீட்டில் உள்ள மின் சாதனங்களை எவ்வாறு கையாள்வது, மற்றும் பராமரிப்பது குறித்த முக்கிய தகவல்கள்;

Update: 2021-12-02 09:29 GMT

மழைக்காலம் தொடங்கி பல இடங்களில் வெள்ளம் புகுந்து அன்றாட வாழ்க்கையை புரட்டிப்போட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், வீட்டின் சுவர்கள் ஈரமாகி, மின்கசிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த மழைக்காலத்தில் மின்சாதனங்கள் பராமரிப்பு மற்றும் அவற்றை கவனமாக கையாள்வது என்பது மிகவும் முக்கியம். 

மின்சாதன பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த சில டிப்ஸ் உங்களுக்காக: 

  • எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர் ஒவ்வொரு வீட்டிற்கும் அவசியம் இருக்க வேண்டும்.செலவை பார்க்காதீங்க. சேஃப்டியை பாருங்க

  • சேதமான பழைய சுவிட்சுகளை அவசியம் மாற்றி  தரமான சுவிட்சுகளை பொருத்த வேண்டும்.
  • தண்ணீர் ஏற்றும் மோட்டார் சுவிட்ச் போர்ட், வாஷிங் மிஷின், ஃபிரிட்ஜ் ஆகியவற்றின் கீழே ரப்பர் மேட் போட்டுக் கொள்வது பாதுகாப்பானது. சத்தமும் வராது, ஷாக்கும் அடிக்காது.
  • எந்த சுவிட்சை போட்டாலும், இடது கையை பின்புறத்தில் கட்டிக் கொண்டு, வலது கை சுட்டு விரலால் மட்டுமே இயக்குவது பாதுகாப்பானது.
  • பாத்ரூம் சுவிட்ச்போர்டின் மேல் ஒரு பழைய டூத் பிரஷ் வைத்து, அதன் மூலம் சுவிட்சை போடுவது மிகவும் பாதுகாப்பானது.
  • மழைக் காலம் வாட்டர் ஹீட்டர் அடிக்கடி பயன்படுத்த வேண்டியிருப்பதால், அதன் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மும்பையில், ஒரு நடிகை ஹீட்டர் தண்ணீரில் குளிக்கும் போது, ஷாக் அடித்து இறந்து போனார். தண்ணீர் இல்லாமல் ஹீட்டர் எலிமெண்ட் உருகி, அதனால்  மின்சாரம் பாய்ந்து அந்த நடிகை இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே, ஹீட்டரின் ஹாட் வாட்டர் குழாய் வழியாக தண்ணீர் வருவதை உறுதி செய்த பின் ஹீட்டர் சுவிட்சை ஆன் பண்ண வேண்டும்.
  • பொதுவாக வாட்டர் ஹீட்டருக்கு சாதாரண சுவிட்ச் தான் வைத்திருப்பார்கள். அதற்குப் பதிலாக எம்சிபி வைத்தோம் என்றால் ஹீட்டரில் ஏதாவது ஷார்ட் சர்க்யூட் ஆகும் போது ட்ரிப் ஆகி நம்மை காக்கும்.

  • வாஷிங் மெஷின், கிரைண்டர் போன்றவற்றைக் கையாளும் போது, சுவிட்சை ஆஃப் பண்ணாமல் ஈரத் துணிகளை எடுப்பதோ,மாவை அள்ளுவதோ ப்ளீஸ், வேண்டாமே.
  • இவ்வளவு கவனமாக இருந்தும்,  ஷாக் அடிக்க நேர்ந்தால், நேர்ந்து விட்டால், அருகிலுள்ளவர் ஒரு கம்பு அல்லது துடைப்பக் கட்டை எடுத்து பாதிக்கப்பட்டவரின் கையை அடிக்க வேண்டுமே தவிர பாதிக்கப்பட்டவரை நேரடியாக தொடக் கூடாது. இன்னும் சொல்லப்போனால் செருப்பால் அடிப்பது மிகவும் பாதுகாப்பானது.
  • கைக் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு மின்சாதனங்களைத் தொடாதீர்கள். குழந்தைகளுக்கு எட்டும்படியாக சுவிட்ச் பாக்ஸ் வைக்கக் கூடாது.
  • சிங்கிள் பேஸ் சப்ளை வைத்திருப்போர், இரு முனை அயன் கிளாட் சுவிட்சும், 3 பேஸ் சப்ளை வைத்திருப்பவர்கள் 4 முனை சுவிட்சும் வைத்திருக்க வேண்டும்.
  • நியூட்ரலில் லிங்க் போட்டிருக்க வேண்டும்; ஃப்யூஸ் போடக் கூடாது. நியூட்ரல் கிரவுண்டிங்கை சரியாகப் பராமரிக்க வேண்டும்.
  • வீட்டின் அனைத்துச் சுவர்களும் ஈரமாக இருக்கும். குறிப்பாக,மெயின் சுவிட்ச் போர்ட் இருக்குமிடம் ஈரமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே நாம்தான், மழைக் காலத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
Tags:    

Similar News