உங்கள் டுவிட்டர் கணக்கை நம்பகத்தன்மையாக (Twitter Verified) மாற்றுவது எப்படி?
உங்கள் டுவிட்டர் கணக்கை நம்பகத்தன்மையாக (Twitter Verified) மாற்றுவது எப்படி? என்பதை தற்போது தெரிந்துகொள்வோம்.
சமூக வலைதளமான டுவிட்டரில் சமீப காலமாகவே அரசியல் தலைவர்கள், சினிமா, எழுத்தாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களின் கணக்குகளைப்போன்று போலி கணக்குகள் உருவாக்கி அவர்களின் நம்பகந்தன்மையை கெடுக்கும் விதமாக பதிவிட்டு வருகின்றனர். மோசடியிலும் ஈடுபட்டு, உங்களை பின்தொடர்பவர்களின் தகவல்களையும் திருடச் செய்கின்றனர்.
இந்த கணக்குகளை முற்றிலும் ஒழிக்க முடியாது. ஆனால் அனைத்து போலிகளையும் ஒழிப்பதற்கு பதிலாக கணக்கு சரிபார்ப்பு சேவை மூலம் நம்பகத்தன்மை மற்றும் அதிகாரப்பூர்வ கணக்கை (Verified) உருவாக்க முடியும். இதன் மூலம் பயனர்கள் போலி கணக்குகளை தவிர்க்க உதவியாக இருக்கும். நம்பகத்தன்மையை உருவாக்க உங்கள் பெயருக்கு அடுத்துள்ள நீல நிறச் சரிபார்ப்பு அடையாளத்தைப் பெறுங்கள்.
உங்கள் டுவிட்டர் கணக்கை நம்பகத்தன்மையாக (Veryfied) மாற்றுவது எப்படி?
முதலில் உங்கள் டுவிட்டர் கணக்கை login செய்து உள் நுழையவும். பின்னர் Settings and privacy பகுதிக்கு சென்று Account information -ஐ கிளிக் செய்யவும்.
இதனைத்தொடர்ந்து உங்களுடைய பாஸ்வேர்டு கொடுத்து Confirm கொடுக்கவும். இதனையடுத்து வரும் காலத்தில் Verified தேர்வு செய்துகொள்ளவும். பின்னர் Start Request தேர்வு செய்து Select a category- யில்
Government official or affiliate
Company, brand, or organization
News organization or journalist
Entertainer or entertainment group
Professional sports or gaming entity
Content creator or influential individual
Activist or organizer
எந்த வகையை சேர்ந்தவர்கள் என்பதை தேர்வு செய்துகொள்ள வேண்டும்.
உதாரணமாக நீங்கள் செய்தி நிறுவனமாக இருந்தால் News organization or journalist-ஐ தேர்வு செய்து உள் நுழைய வேண்டும்.
பின்னர் வரும் account type-ல் News organization or publication என்பதை தேர்வு செய்து Yes It's Complete கொடுக்க வேண்டும்.
இதனைத்தொடர்ந்து உங்கள் கணக்கு ஒரு முக்கிய செய்தி நிறுவனமாக சரிபார்ப்புக்குத் தகுதி பெற்றுள்ளது என்பதைக் காட்ட பின்வரும் ஆதார வகைகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.
குறைந்தபட்சம் மூன்று வெளிப்புறக் குறிப்புகளைக் கொண்ட உங்கள் செய்தி நிறுவனத்தைப் பற்றிய விக்கிபீடியா பக்கத்திற்கு இணைப்பை வழங்கவும்.
இந்த செயல்பாடுகள் அனைத்தும் முடிந்தபின் உங்களது டுவிட்டர் கணக்கு சரிபார்ப்பு கோரிக்கையை அந்நிறுவனம் பரீலித்து முடிவு தெரிவிக்கும்.