வீட்டிலிருந்தே பிரபல கோவில்களின் பிரசாதம் பெறுவது எப்படி? கட்டண விபரம்..

தமிழ்நாட்டின் பிரபல கோவில்களின் பிரசாதங்களை இல்லங்களில் சேர்க்கும் வசதியை அஞ்சல் துறை செய்து வருகிறது.

Update: 2023-05-26 02:57 GMT

பைல் படம்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைஅஞ்சல் துறையுடன் இணைந்து, இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும்பிரசாதங்களை அஞ்சல் மூலம் மக்களுக்கு அனுப்பும் பணியைத் தொடங்கியுள்ளது.

இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் உள்ள 48 கோவில்களின் பிரசாதத்தை, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளமான www.hrce.tn.gov.in மூலமாகவோ அல்லது "திருக்கோயில்" மொபைல் செயலி மூலமாகவோ பக்தர்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதில் பக்தர்கள் தங்களுக்கு எந்த கோவிலின் பிரசாதம் தேவை, முகவரி, தேவையான அளவு மற்றும் இதர விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இதன் அடிப்படையில், தபால் துறையினர் கோவில் அதிகாரிகளிடம் இருந்து பிரசாதத்தைப் பெற்று, விரைவு அஞ்சலில் பாதுகாக்கப்பட்ட உறைகளில் பக்தர்களின் வீட்டு வாசலிலேயே வழங்குவர்.

சென்னை நகர மண்டலத்தின் கீழ், பின்வரும் 11 கோவில்களுக்கு பிரசாதம் சேவை கிடைக்கிறது.

கோவிலின் பெயர்

பிரசாத விவரங்கள்

பிரசாதத்தின் விலை (ரூ)

தேவராஜசுவாமி கோயில், காஞ்சிபுரம்-631501

குங்குமம், மஞ்சள்காப்பு, சுவாமி புகைப்படம்

100

வடபழனி ஆண்டவர் கோவில், வடபழனி, சென்னை 600026

சுவாமி புகைப்படம், விபூதி

70

பார்த்தசாரதி கோவில், திருவல்லிக்கேணி, சென்னை 600005

குங்குமம், மஞ்சள், சுவாமி புகைப்படம்

80

லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்,சோளிங்கர்-631102

கல்கண்டு, முந்திரி, உலர் திராட்சை, குங்குமம், சுவாமி புகைப்படம்

145

அருணாச்சலேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை 606601

சுவாமி புகைப்படம், விபூதி, குங்குமம்

10

சுப்பிரமணியசுவாமி கோயில், திருத்தணி-631209

குங்குமம், விபூதி, சுவாமி புகைப்படம்

100

தியாகராஜசுவாமி கோயில், திருவொற்றியூர், சென்னை -600019

குங்குமம், விபூதி, சுவாமி புகைப்படம், வில்வம்

50

தேவி கருமாரியம்மன் கோவில், திருவேற்காடு, சென்னை 600077

குங்குமம், விபூதி, திருசாம்பல், சுவாமி புகைப்படம்

50

காமாட்சி அம்மன் கோவில், மாங்காடு-600122

குங்குமம், மஞ்சள்,சுவாமி புகைப்படம்

30

கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர், சென்னை 600004

குங்குமம், விபூதி

30

அங்காளம்மன் கோவில், மேல்மலையனூர் -604204

குங்குமம், விபூதி, புற்று மண், சுவாமி புகைப்படம், அம்மன் கயிறு

10

இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் பிரசாதங்களை முன்பதிவு செய்யும் வசதியுள்ள தமிழ்நாட்டின் வேறு சில முக்கிய கோவில்கள்:

கோவிலின் பெயர்

பிரசாத விவரங்கள்

பிரசாதத்தின் விலை (ரூ)

மாரியம்மன் கோவில் - சமயபுரம்

குங்குமம், விபூதி, மஞ்சள், சுவாமி புகைப்படம்

30

சுவாமிநாதசுவாமி கோயில் – சுவாமிமலை-612302

குங்குமம், விபூதி

15

அரங்கநாதசுவாமி கோயில் – ஸ்ரீரங்கம்-620006

கல்கண்டு, மஞ்சள்

19

சுப்பிரமணியசுவாமி கோயில், திருப்பரங்குன்றம்-625005

விபூதி, சுவாமி புகைப்படம்

70

மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில், மதுரை-625001

தாழம்புகும்குமம், சுவாமி புகைப்படம், மாங்கல்யசரடு

100

சுப்ரமணியசுவாமி கோயில், திருச்செந்தூர்-628215

இளையதிருநீர், புத்தமுது, சுவாமி புகைப்படம்

120

தண்டாயுதசுவாமி கோயில், பழனி-624601

பழனிபஞ்சாமிர்தம், புகைப்பட சட்டகம், விபூதி

140

சுப்பிரமணியசுவாமி கோயில், மருதமலை-641046

குங்குமம், விபூதி, புகைப்படம்

66

குறிப்பு: மேலே உள்ள கட்டணங்கள் அஞ்சல் கட்டணம் சேர்க்கப்படாத கட்டணம் ஆகும்.

கோயில் பிரசாதத்தை வீட்டு வாசலிலேயே பெற விரும்பும் பொதுமக்கள் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் ‘திருக்கோயில்’ மொபைல் செயலி மூலமாகவோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்யலாம்.

Tags:    

Similar News