வாக்காளர் அடையாள அட்டை டிஜிட்டலில் : ஈசியாக பதிவிறக்கம் செய்வது எப்படி?

உங்கள் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை அட்டையைப் பதிவிறக்குவதற்கான செயல்முறையை தெரிந்துகொள்வோம்.

Update: 2022-05-31 11:55 GMT

வாக்காளர் அடையாள அட்டை என்பது மிக முக்கியமான அடையாளச் சான்று ஆவணம் மற்றும் உங்கள் தேர்தல் உரிமைகளைப் பெற உதவும் மிக முக்கியமான தாள் ஆகும். மத்திய அரசு அரசாங்க ஆவணங்களை முழுவதுமாக டிஜிட்டல் செயல்முறையாக மாற்றும் நோக்கில் வாக்காளர் அடையாள அட்டையின் மிகவும் பாதுகாப்பான மின்னணு பதிப்பான e-Epic card ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதை உங்கள் கணினியிலோ அல்லது மொபைல் போனிலோ எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி?


  • உங்கள் e-EPIC PDF அட்டை அல்லது ஆன்லைன் வாக்காளர் அடையாள அட்டையைப் பதிவிறக்கம் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியான https://nvsp.in இல் உள்நுழைவதன் மூலம் குடிமக்கள் e-EPIC ஐ பதிவிறக்கம் செய்யலாம்.
  • பின்னர் வரும் பக்கத்தில் Register/Login பதிவு அல்லது உள்நுழையவதை தேர்நதெடுக்க வேண்டும்.
  • இதனைத்தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது விண்ணப்பித்திருந்தால் படிவத்தின் குறிப்பு எண்ணை உள்ளிடவும்.
  • பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் அனுப்பப்பட்ட OTP ஐ Verify செய்யவும்.
  • Download e-EPIC என்பதைக் கிளிக் செய்யவும்.
  • பதிவிறக்கம் செய்யப்பட்ட இதனை வாக்காளரின் வசதிக்கேற்ப அச்சிட்டு, வாக்குப்பதிவின் போது வாக்காளர் சான்றாகக் கொண்டு வரலாம்.

தற்போது e-EPIC பதிவிறக்க வசதி நவம்பர் 2020 க்குப் பிறகு பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களுக்கு இந்த வசதி பொருந்தும். மற்றவர்களுக்கு இந்த வசதி விரைவில் கிடைக்கும்.

Tags:    

Similar News