Hotel Robot- திருப்பூர் அருகே தனியார் ஓட்டலில் உணவு பரிமாறும் சர்வராக ரோபோ; வாடிக்கையாளர்கள் ஆச்சரியம்

Hotel Robot- திருப்பூர் அருகே உள்ள ஒரு ஓட்டலில் உணவு பரிமாறும் ரோபோ சர்வரை பார்த்து வாடிக்கையாளர்கள் ஆச்சரியமடைகின்றனர்.;

Update: 2023-12-15 10:37 GMT

Hotel Robot- அவிநாசியில் உள்ள ஓட்டல் ஒன்றில் உணவு பரிமாறும் ரோபோ இதுதான் (கோப்பு படங்கள்) 

Hotel Robot, Customers, surprise-  திருப்பூர் அருகே தனியார் ஓட்டலில் உணவு விநியோகிக்கும் ரோபோவை பார்த்து  வாடிக்கையாளர்கள் ஆச்சரியமடைந்தனர். 

மனிதர்கள் அவரவர் வேலைகளை அவரவரே செய்துக்கொள்ளும் ஒரு காலகட்டம் இருந்தது. இப்போது இயந்திர உலகமாக வாழ்க்கை மாறிவிட்டது. அறிவியல் வளர்ச்சியில் ஏற்பட்ட அபரிமிதமான முன்னேற்றமும், நவீன தொழில் நுட்பங்களில் ஏற்பட்ட வளர்ச்சியும் மனிதர்களின் வாழ்க்கையை வேறு விதமான ஒரு தளத்தில் கொண்டு சென்றுக்கொண்டு இருக்கிறது. உலகத்தில் எந்த மூலையில் என்ன நடந்தாலும், அடுத்த சில விநாடிகளில் நமது கைகளில் உள்ள மொபைல் போன்களில் அந்த காட்சிகளை நேரடியாக பார்த்துவிட முடிகிறது.

கடல் கடந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கிற நண்பர்களை, உறவினர்களை சில விநாடிகளில் மொபைல் போன்களில் வீடியோ கால்களில் தொடர்பு கொண்டு பேசப்படுகிறது. முதலில் வெளிநாடுகளில் மட்டுமே தொழில் நிறுவனங்களில் மனித ஆற்றலுக்கு பதிலாக இயந்திர ஆற்றலை பயன்படுத்துவது வழக்கமாக இருந்தது. இப்போது அது தமிழ்நாட்டிலும் பரவ துவங்கி விட்டது. திருப்பூரிலேயே ரோபோ ஓட்டல் ஒன்றில் உணவு பரிமாறுவது ஆச்சரியமான, அதிசயமான ஒன்றாகவே இன்றும் இருக்கிறது. ஆனால் அது உண்மையாக நடந்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள தனியார் உணவகத்தில் முதன்முறையாக உணவு விநியோகிக்கும் பணியில் ரோபோ. ஆச்சரியத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி - திருப்பூர் நெடுஞ்சாலையிலுள்ள தனியார் உணவகத்தில் உணவு விநியோகிக்கும் பணியில் முதன்முறையாக ரோபோ பயன்படுத்தப்படுகிறது. இந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களிடம், சப்ளையர்கள் ஆர்டர் எடுத்து சமையல்காரர்களிடம் வழங்கி விடுகின்றனர்.

உணவு தயாரானதும் ரோபோவில் உணவு வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அலமாரியில் அந்த உணவு வைக்கப்பட்டு, அதில் உணவு ஆர்டர் செய்த வாடிக்கையாளரின் டேபிளுக்கு அந்த ரோபோ செல்ல வேண்டுமோ அந்த எண் அதில் பதிவேற்றம் செய்து உத்தரவு  பிறப்பிக்கபடுகிறது.

அதனை தொடர்ந்து ரோபோ குறிப்பிட்ட டேபிளுக்கு உணவு எடுத்துச் செல்கிறது. அதனிடமிருந்து ஆர்டர் செய்த உணவை ரோபோவின் அலமாரியில் இருந்து அங்கு இருக்கும் சப்ளையர் அல்லது வாடிக்கையாளர்கள் அந்த உணவுகளை எடுத்து கொள்ளலாம். உணவு வழங்கிய பின்பு அதற்குரிய இடத்தி்ல் தானாக வந்து நின்றுவிடும்

ரோபோ சப்ளை குறித்து உணவகத்தின் மேற்பார்வையாளர் கேதீஸ்வரன் கூறுகையில்:

சமையலறையில் இருந்து வாடிக்கையாளர்கள் இருக்கும் இடம் வரை உணவு எடுத்து செல்ல ரோபோ பயன்படுத்த படுகிறது. இதற்காக ரோபோவில் அதற்கு உண்டான ப்ரோக்ராம் சார்ட் மற்றும் எண்கள் கண்டறியும் சேவை ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.

கேமரா, சென்சார்

ரோபோவில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மற்றும் சென்சார் மூலம் குறிப்பிட்ட டேபிளுக்கு சென்று ரோபோ உணவு வழங்கும். தொடர்ந்து அடுத்த டேபிளுக்கு சென்று விடும். மேலும் பிறந்தநாள், திருமணநாள் போன்ற விசேஷங்கள் சமயத்தில், சம்பந்தப்பட்டவர்கள் எதிர்பாராத வகையில் ரோபோ வாயிலாக கேக்கை அனுப்பி வைத்து அவர்கள் ஆச்சரியப்படும் வகையில் 'ஹேப்பி பர்த்டே' என்று பாடும் வகையில் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது

வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். மேலும் குறைந்த நேரத்தில் அதிகளவில் உணவு சப்ளை செய்யப்படுகிறது. இந்த ரோபோவை காண்பதற்காகவே உணவகத்தை தேடி வாடிக்கையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் அதிக அளவில் வருவதாகவும், குழந்தைகள் இந்த ரோபோவை கண்டு அதிக அளவில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News