TNPSC குரூப்-2 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

குரூப்-2 தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-05-11 12:44 GMT

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - || (நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) (தொகுதி - || மற்றும் தொகுதி IIA) பதவிக்கான முதல் நிலைத் தேர்வு  வரும் 21ம் தேதி முற்பகலில் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News