காவல் உதவி ஆய்வாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை விடுமுறை

காவலர்களுக்கு வார விடுமுறை போல் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு

Update: 2022-08-16 16:01 GMT

தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழக சட்டசபையில் கடந்த மே மாதம் 10-ந்தேதி காவல் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்து பேசும்போது, காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இதனை  தொடர்ந்து, தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும்.  இதன் மூலம் 10 ஆயிரத்து 508 பேர் பயனடைவார்கள் என்றும் அறிவித்தார். 

Tags:    

Similar News