கனமழை காரணமாக 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக நெல்லை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Update: 2021-11-01 02:22 GMT

(மாதிரி படம் )

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கும் என்றும் அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று முதல் வருகிற நவம்பர் 3ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,  சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இன்று குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், மதுரை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

1 முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட இருந்த நிலையில், கடலூர் மற்றும் .   விழுப்புரத்தில் கனமழை பெய்து வருவதால், அந்த  மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் கனமழை எதிரொலியாக நெல்லை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் மற்றும் கடலூர் என 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News