24,344 ஆரம்ப பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை: பேரவையில் ஆளுநர் ரவி உரை
தமிழகத்தில், 24,344 ஆரம்ப பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை; ஆசிரியர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி அளிக்கப்படும் என்று ஆளுனர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம், இன்று காலை தொடங்கியது. இதில் ஆளுனர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். வணக்கம் என தமிழில் சொல்லி உரையை தொடங்கிய ஆளுனரின் உரையில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.
முக்கிய அறிவிப்புகளின் சாராம்சம் வருமாறு:
* தமிழகத்தில், 24,344 ஆரம்ப பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்படும். ஆசிரியர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி அளிக்கப்படும்.
* நம்மை காக்கும் 48, என்ற திட்டத்தின் கீழ், விபத்துக்குள்ளான நான்காயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
* அரசின் இலவச பேருந்துகளில் கடந்த 4 மாதங்களில் 61% அளவிற்கு மகளிர் பயணம் செய்துள்ளனர்.
* ஜனவரி 12ம் தேதி உலகத்தமிழ் நாளாக கொண்டாடப்படும்.
* வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய, மத்திய ஒன்றிய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியை, உடனடியாக விடுவிக்க வேண்டும்.
* தந்தை பெரியார், கலைஞர் கருணாநிதியின் கனவை நனவாக்கும் விதமாக அனைத்து சாதியினரையும் தமிழ்நாடு அரசு அர்ச்சகர்கள் ஆக்கியுள்ளது.
* தமிழக அரசின் நடவடிக்கையால், ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
* நீட் தேர்வு தேவையில்லை என்ற நிலையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது . நுழைவுத் தேர்வுகள் கிராம மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துகிறது. நீட் போன்ற நுழைவு தேர்வுகள் உயர்கல்விக்கு தேவை இல்லை என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது.
*'இல்லம் தேடி கல்வித் திட்டம்' மூலம் தரமான கல்வியை எல்லா குழந்தைகளுக்கும் வழங்க, தமிழக அரசு முனைந்து வருகிறது.
* இயற்கையுடன் இணைந்து வாழும் தமிழகர்களின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில், மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு ஆளுனர் ரவி தனது உரையில் குறிப்பிட்டார்.