5 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-10-15 02:37 GMT

பைல் படம் : நாமக்கல் மாவட்டத்தில் கனமழை! ஒரே நாளில் 465 மி.மீ. மழை பதிவு!

தமிழகத்தில்  5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நேற்றிரவு சென்னை மட்டும் புறநகர் பகுதிகளில்ல இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்தது. மேலும் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று ( சனிக்கிழமை ) வரை அதிகபட்சமாக தேனி மாவட்டம், தேக்கடியில் 100 மி.மீ. மழை பதிவானது. அதேபோல கன்னியாகுமரி மாவட்டம், களியல் 80மி.மீ மழையும் , திற்பரப்பு, பேச்சிப்பாறையில் தலா 60 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

மேலும் லட்சதீவு பகுதிகளையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கத் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News