தமிழகத்தில் கனமழை பெய்யும் மாவட்டங்கள் - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

ஆந்திர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவ காற்று காரணமாக மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

Update: 2021-08-29 07:43 GMT

ஆந்திர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

வட தமிழ்நாட்டை ஒட்டி ஆந்திர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவ காற்று காரணமாக 29.08.2021:, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

30.08.2021: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.

31.08.2021: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

01.09.2021:, வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.

02.09.2021,: வட கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்);

சத்தியபாமா பல்கலை (செங்கல்பட்டு), அவலாஞ்சி (நீலகிரி) தலா 9, சின்னக்கல்லார் (கோவை) 8, நடுவட்டம் (நீலகிரி) 7, கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 6, சோழிங்கநல்லூர் (சென்னை), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), தேவலா (நீலகிரி), வால்பாறை (கோவை) தலா 5, சோழவரம் (திருவள்ளூர்), பொண்ணை அணை (வேலூர்) தலா 4, சென்னை விமான நிலையம், சென்னை நுங்கம்பாக்கம், பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), வானமாதேவி (கடலூர்) தலா 3, பெரியார் (தேனி), ஆயிக்குடி (தென்காசி), செஞ்சி (விழுப்புரம்) தலா 2, பாபநாசம் (திருநெல்வேலி), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), ஏற்காடு (சேலம்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்ககடல் பகுதிகள்

29.08.2021: மன்னார் வளைகுடா மற்றும் தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக்கடல் பகுதிகள்:

29.08.2021, 30.08.2021: கேரள மற்றும் கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

29.08.2021, 30.08.2021: தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags:    

Similar News