கருத்தே சொல்ல விடமாட்டேங்கறாங்க......பேனா நினைவு சின்ன கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

சென்னை மெரினா கடலில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.;

Update: 2023-01-31 10:58 GMT

பைல் படம்.

முன்னாள் முதலமைச்சர்  கருணாநிதியை கௌரவப்படுத்தும் விதமாக, மெரினா கடற்கறையில் அமைந்துள்ள அவரது நினைவிடம் அருகே கடலினுள் 134 அடி உயர பேனா சிலையை அமைக்க ஆளும் திமுக அரசு முடிவு செய்து மத்திய அரசின் சுற்றுசூழல் துறையின் ஒப்புதலை கேட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான  கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். அவரது உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரை அடக்கம் செய்யும் போது அவர் பயன்படுத்திய பேனாவும் உடன் வைத்து அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் 2.21 ஏக்கர் பரப்பில் நினைவிடம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த  பேனா நினைவுச்சின்னமானது  கடலுக்குள் ரூ. ௮௧ கோடி செலவில்  அமைக்கப்பட உள்ளது. இதற்கு சென்றடையும் வகையில்  நினைவிடத்தில் இருந்து  290மீட்டர்  துாரத்திற்கும், கடற்கரையில் இருந்து  360 மீட்டர்  துாரத்திற்கும் என 650 மீட்டர்  தொலைவிற்கு கடலில் பாலம் அமைக்கப்பட உள்ளது. கருணாநிதி நினைவிடத்தின் பின்பகுதியில் 42 மீட்டர் உயரத்தில் பேனா வடிவ  நினைவுச்சின்னம்  அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையமானது அனுமதி  அளித்தது,. மாநில கடலோர மண்டல மேலாண்மைஆ ணையம் அனுமதி அளித்துவிட்ட நிலையில்   மத்திய அரசின் அனுமதிக்கு  இது அனுப்பி வைக்கப்பட்டது. 

பின்னர் மத்திய சுற்றுச்சூழல்,  வனம் மற்றும் காலநிலை  மாற்றத்துறை  தமிழக பொதுப்பணித்துறைக்கு டிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில்  இந்த திட்டத்திற்கு  சுற்றுச்சூழல் த ாக்க மதிப்பீட்டு அறிக்கை, சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் இடர்ப்பாடுகள் மதிப்பீட்டு அறிக்கை,  பேரிடர் மேலாண்மை திட்டம் ஆ கியவற்றை தயார்செய்து  அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் மத்திய அரசின் சுற்றுச் சூழல் துறையின் சார்பாக இன்று பொது மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் , சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்தக் கருத்து கேட்பு கூட்டத்தில் இருந்த சிலர் கூச்சலிட்டதால் அவர்களுக்கும் திமுக ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது.

இதன் பின்னர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர் பேசியதாவது:

"கடலில் பேனாவை வைப்பதாக இருந்தால் வெறுமனே அப்படியே நிறுவ முடியாது. கல், மணல் போன்ற கலவைகளை கொட்ட வேண்டும். அதனால் கடல்வளம், பவளப்பாறைகள் பாதிக்கப்படும். உங்களுக்கு எதைப்பற்றி அக்கறை உள்ளது. கடலில் அடக்கம் செய்யவிட்டதே தவறு. இதில் பேனா வைக்க எப்படி வைக்க அனுமதிக்க முடியும். பள்ளிக் கூடம் கட்ட காசு இல்லை. ஆனால் பேனா வைக்க எங்கிருந்து காசு வந்தது. நீங்கள் பேனாவை வைத்துப் பாருங்கள் நானே வந்து உடைப்பேன். கடலில் பேனா வைத்தால் 13 மீனவ பகுதிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது" எனப் பேசினார்.

முன்னதாக கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக, ஆம் ஆத்மி, மே 17 இயக்கம் உள்ளிட பல்வேறு கட்சிகள் கடலில் பேனா வைக்க கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

Tags:    

Similar News