பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க கவர்னர் மறுப்பு.....

Governor Refused Govt Recomment முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்து குவிப்பு வழக்கிற்கான தண்டனையை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அவர் மீண்டும் எம்எல்ஏ பதவியை தக்கவைத்துக்கொண்டார். இருந்த போதிலும் அவருக்கு இறுதி தீர்ப்பு அளிக்காததால் மீண்டும் அமைச்சராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Update: 2024-03-18 06:56 GMT

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி  மற்றும் எம்எல்ஏ பொன்முடி (கோப்பு படம்)

Governor Refused Govt Recomment

தமிழக அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு நடந்து வந்தது. அதன் தீர்ப்பில் அவருக்கு3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 50 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்நிலையில் அவரது அமைச்சர் எம்எல்ஏ பதவி பறிபோனது. தற்போது சுப்ரீம் கோர்ட் அவரது தண்டனையை நிறுத்தி வைத்து கடந்த 11 ந்தேதி உத்தரவிட்டது.

சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க தமிழக கவர்னர் ரவி மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் நிரபராதி என கோர்ட் அறிவிக்காததால் முதல்வர் ஸ்டாலினின் சிபாரிசை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக வெற்றி பெற்ற பின்னர் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீதான சொத்துகுவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என கடந்த டிசம்பர் 15 ம் தேதி சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது. அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 50 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பின் எதிரொலியால் பொன்முடி தனது எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவி ஆகிய இரண்டையும் இழந்தார். மேலும் அவர் வகித்து வந்த உயர்கல்வித்துறை,பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.

இதனால் பொன்முடி வெற்றி பெற்ற தொகுதியான திருக்கோவிலுார் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சட்டசபை செயலகத்தில் இருந்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகுவுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அவர் அந்த கடிதத்தை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்தார்.

தற்போது பொன்முடிக்கு சென்னை ஐகோர்ட் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து கடந்த 11 ந்தேதி டில்லி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதனால் பொன்முடி எம்எல்ஏ பதவி இழந்ததால் திருக்கோவிலுார் சட்டசபை தொகுதி காலியானதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

இந்த அறிவிப்பானது முறைப்படி கெஜட்டிலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் எம்எல்ஏ பதவியைத் தக்கவைத்துக்கொண்ட பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி கடந்த 13 ம்தேதி கவர்னர் ரவிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பினார். ஆனால் மறுநாள் காலை கவர்னர் ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டில்லி புறப்பட்டு சென்றார்.

எனவே பொன்முடி எப்போது மீ்ண்டும் அமைச்சராக பதவியேற்பார் என்ற எதிர்பார்ப்பானது அனைவரிடமும் நிகழ்ந்தது. மீண்டும் டில்லியிலிருந்து கவர்னர் சென்னைக்கு திரும்பினார்.

தற்போது பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என கவர்னர் ரவி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர, அவர்நிரபராதி என கோர்ட் சொல்லவில்லை. எனவே அவரை அமைச்சராக்குவது சரியாக இருக்காது என்று தெரிவித்துள்ளார். பொன்முடி மீண்டும் அமைச்சராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையே தொடர்கிறது.

இதுகுறித்து ராஜ்பவன் வட்டாரத்தில் தெரிவிக்கும்போது, எம்எல்ஏ என்பது சபாநாயகர் அதிகாரத்துக்கு உட்பட்ட பதவி. இறுதி தீர்ப்பு வரும் வரை ஒரு தொகுதி காலியாக இருக்கக்கூடாது என்பதால் அவர் மீண்டும் எம்எல்ஏவாக இருப்பதால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் நிரபராதி என அவர் அறிவிக்கப்படாத நிலையில் அமைச்சர் பதவி ஏற்பதில் பெரும் சிக்கல் உள்ளது என தெரிவித்தனர்.

Tags:    

Similar News