நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர்

மசோதாவை திருப்பி அனுப்பியது குறித்து பிப்.1-ம் தேதி அரசுக்கு விளக்கி உள்ளதாக கவர்னர் மாளிகை அறிக்கை

Update: 2022-02-03 12:07 GMT
ஆளுநர் ரவி 

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார்.

திருப்பி அனுப்புவதற்கான காரணங்களை பிப்ரவரி 1-ம் தேதி அரசுக்கு விளக்கி உள்ளதாக கவர்னர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. நீட் விலக்கு மசோதா சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்கு மாறாக உள்ளதாக கவர்னர் மாளிகை தமிழக அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து கவர்னர் மளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நீட் தேர்வில் விலக்கு கேட்டு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவையும், தமிழக அரசு அமைத்த குழுவின் அறிக்கையையும் கவர்னர் தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த மசோதாவானது, மாநிலத்தில் வசிக்கும், பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு எதிராக உள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதனால், இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டி, தமிழக சபாநாயகருக்கு, நீட் தேர்வு விலக்கு மசோதாவை கவர்னர் அனுப்பி வைத்துவிட்டார்.

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவ கல்லூரி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்வு குறித்து நன்கு ஆராய்ந்ததுடன், ஏழை மாணவர்களின் பொருளாதார சுரண்டலை தடுக்கவும், சமூக நீதியை மேம்படுத்தவும், நீட் தேர்வு உதவுகிறது என்பதை உறுதி செய்தது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News